உலகிலேயே மிகவும் மலிவான நகரங்கள் பட்டியலில் 2 இந்திய நகரங்கள்
இந்தியா, மார்ச் 11-
நியூயார்க் நகரத்தின் விலைவாசியை அடிப்படையாக
கொண்டு லண்டனை அடிப்படையாக கொண்ட பொருளாதார உளவுக்குழுவினர் மேற்கொண்ட
ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், உலகிலேயே மலிவான நகரங்களாக பெங்களூரு, மும்பை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, மும்பையை தொடர்ந்து ஜாம்பியாவின் தலைநகரான லுசாகா மலிவான நகரங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் லண்டன் 6வது இடத்தையும், நியூயார்க் 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
விலை உயர்ந்த நகரங்கள் வரிசையில் சிங்கப்பூர் ஜூரிச், ஹாங்காங், ஜெனிவா, பாரீஸ் ஆகியவை உள்ளன.
No comments
Thank you for your comments