திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது 81 மையங்களில் 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்
திருவண்ணாமலை, மார். 5-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நேற்று தொடங்கியது. 81 மையங்களில் 24 ஆயிரத்து 259 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தமிழகம் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வுகள் நேற்று தொடங்கியது. வரும் ஏப்ரல் 1ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடக்கிறது. மொத்தம் 8 லட்சத்து 82
இத்தேர்வுக்காக ஆயிரத்து 700 அறை கண்காணிப்பாளர்களும், 140 பறக்கும்
படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நூற்றுக்கும் மேறபட்ட போலீசாரும் நியமிக்கப்பட்டிருந்தனர். பிளஸ் 2
பொதுத் தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிவரை
நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வினை கலெக்டர்
அ.ஞானசேகரன் திருவண்ணாமலையிலுள்ள நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் தேர்வு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு எழுதும்
மாணவர்களுக்காக பேருந்துகள் இயக்கவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments