பாமகவின் தேர்தல் அறிக்கை 10 நாட்களில் வெளியிடப்படும்: ராமதாஸ் தகவல்
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், பாமக வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் தேமுதிக வை சேர்ந்த நிர்வாகிகள் பாமக வில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில், 300 பேர், பாமக வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ராமதாஸ் செய்தியாளர்களிடம கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், பாமக வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும்.
தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் இருந்து பாமகவிற்கு அழைப்பு வந்துகொண்டிருக்கிறது.
தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான், தினமும் ஏராளமானோர் பாமகவிற்கு வருகின்றனர். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
No comments
Thank you for your comments