அமெரிக்காவில் தொண்டுப் பணிக்காக கவுரவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி சிறுவன்
இந்தியா, பிப்.17:
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலம்,
ஹார்ட்போர்டு நகரைச் சேர்ந்த இஷான் படேல் மேற்கு ஹார்ட்போர்ட் நகரில் உள்ள
கிங்ஸ்உட்-ஆக் ஸ்போர்டு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் ‘Planting Pencils’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி
அமெரிக்கா மற்றும் உலகம்
முழுவதும் ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களின்
கல்விக்கு உதவி வருகிறார்.
போதிய நிதிவசதியற்ற பள்ளிகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் அளிக்கும் பணியில் இவரது அமைப்பு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹார்ட் போர்டு நகரில் அண்மையில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில்
மிலன் கலாச்சார அமைப்பு (Milan Cultural Organisation) சார்பில் இஷான்
கவுரவிக்கப்பட்டுள்ளார்.
மிலன் கலாச்சார அமைப்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய
மக்களுக்காக உள்ள அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம், இந்திய கலை மற்றும்
கலாச்சாரத்தை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் பரப்பி வருகின்றனர்.
இந்த அமைப்பு பள்ளி, கல்லூரி மற்றும் கலாச்சார மையங்களில் இந்திய கலைகள்
பற்றிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மிலன் கலாச்சார அமைப்பின் தலைவர் சுரேஷ் சர்மா
கூறுகையில், இந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை
ஒன்றிணைக்கவும், நம் கலைகளை வளர்க்கவும், ஒன்றாக கூட்டுச் சேர்ந்து
அமெரிக்க வளர்ச்சியில் ஈடுபடவும் முடியும் என தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments