Breaking News

குரானை விமர்சித்து பதிவிட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

சவூதி, பிப்.29:
கடவுள் மறுப்புக் கொள்கையோடு சமூக வலைத்தளத்தில் குரானை கேலி செய்யும் விதமாக பதிவிட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 2 ஆயிரம் சவுக்கடி தண்டனையை சவூதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது. 

இஸ்லாமியத்தை பின்பற்றும் சவூதி அரேபியாவில்
சிறிய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடவுளை தொழ மறுப்பவர்கள், மதம் மாறுபவர்கள், ஆகியோருக்கு பெரிய அளவில் தண்டனைகள் வழக்கப்பட்டு வருகிறது.

இதற்காகவே மதக்காவலர்கள் பலர் அங்குள்ளனர். சமூக வலைத்தளங்களில் கடவுள் குறித்தோ இஸ்லாம் குறித்தோ யாராவது இழிவாக பதிவிட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் கடவுளை நம்ப மறுத்து டுவிட்டரில் குரான் குறித்து கேலியாக பதிவிட்ட நபரை மதக்காவலர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரை ரியாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனது கருத்துகள் தனது மத நம்பிக்கை தொடர்பான எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் உரிமை  தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 4 ஆயிரம் யூரோ மற்றும் 2 ஆயிரம் சவுக்கடி ஆகியவைகளை தண்டனையாக தீர்ப்பளித்தார்.

சவூதி அரேபியாவின் புதிய சட்டத்தின் படி கடவுள் மறுப்பு கொள்கைவாதிகள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற வரம்புக்குள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments