Breaking News

மேக் இன் இந்தியா வார விழாவில் தீ விபத்து: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

மகாராஷ்டிரா, பிப்.15:
மகாராஷ்டிராவில் நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழாவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தியாவிலேயே பொருட்களை தயாரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக மேக் இன் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினர்.


இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் மகாராஷ்டிராவில் தொழில் முதலீட்டை பெருக்கவும் மேக் இன் இந்தியா வார விழா நேற்று முன் தினம் மும்பையில் விமரிசையாக தொடங்கியது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக மும்பையில் வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இதில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திரைப்பட நடிகர் அமிதாபச்சன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விழா மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தீடீரென தீ பற்றியது.
இதனை அடுத்து மேடையில் இருந்த அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தீ விபத்து நடைபெற்ற மேடையின் அருகிலேயே இருந்து மீட்பு பணிகளை கண்காணித்து வந்தார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பட்னாவீஸ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய அரசு அனைத்து வகையிலும் மகாராஷ்டிரா அரசுக்கு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், தீவிபத்திற்கான காரணம் குறித்து அறிவதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments