ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியதாக நாடகமாடிய ஆசிரியர்: கைது செய்து சிறையில் அடைத்த போலிசார்
பிரான்ஸ், பிப்.25:
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் தேதி ஐ.எஸ்
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு பாடசாலை ஆசிரியர் நாடகமாடியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாரீஸ் தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் Marseille என்ற நகரில் வசித்து
வரும் பெயர் வெளியிடப்படாத 45 வயதான ஆசிரியர் ஒருவர் பத்திரிகையாளர்களை
தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
பின்னர், கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம், தாக்குதல் நடந்தபோது தான்
பணிபுரிந்த பாடசாலைக்குள் 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்தனர்.
மாணவர்களை தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை தடுத்தபோது,
என்னை கொடூரமாக தாக்கி கழுத்திலும் கையிலும் கத்தியால் வெட்டினார்கள்’
எனக்கூறி தனது கழுத்தில் இருந்த காயத்தை பத்திரிகையாளர்களிடம் காட்டினர்.
ஆசிரியர் அளித்த இந்த புகாரை போலிசார் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று போலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், யூத மதத்தை சேர்ந்த அந்த ஆசிரியர் போலிசாருக்கு தவறான தகவல் அளித்துள்ளார்.
பாரீஸில் தாக்குதல் நடந்த அதே நாள், ஆசிரியர் தன்னைத் தானே கத்தியால் வெட்டிக்கொண்டு நாடகமாடியதை அவரே போலிசாரிடம் ஒப்புக்கொண்டார்.
போலிசாருக்கு தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments