சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது- தமிழில் கெளரி கிருபானந்தன் பெறுகிறார்
டெல்லி, பிப்.16:
இந்த விருதுகள் மொத்தம் 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று
நடைபெற்ற சாகித்ய அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் வெற்றி
பெற்றவர்களுக்கான இறுதி பட்டியலுக்கு அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத்
ஒப்புதல் அளித்தார்.
ஒவ்வொரு மொழியை சேர்ந்த 3 தேர்வுக் குழுவினர் அளித்த பரிந்துரைகளின்
அடிப்படையில் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று சாகித்ய அகாடமி
சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் இவருக்குதான்:
இந்த பட்டியலில் தமிழ் மொழியில் கௌரி கிருபானந்தனுக்கு அவ்விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கெளரி
கிருபானந்தன் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
தெலுங்கில் எட்டனப்புடி சுலோச்சனா ராணி உள்ளிட்டோரின் 60க்கும் மேற்பட்ட
படைப்புகளை கிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார்.
விருதும், பணமும்:
வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், ரூபாய் 50 ஆயிரம் பரிசுப் பணமும்
வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் இந்த விருது
வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய படைப்பாளிகளுக்கான விருது:
சாகித்திய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய
அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும்
மதிப்பிற்குரிய விருதாகும். இவ்விருதில் பரிசுத்தொகையும், ஒரு பட்டயமும்
வழங்கப்படுகின்றன.
24 இந்திய மொழிகள்:
24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான
படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments