Breaking News

அப்துல் கலாம் பெயரில் விரைவில் புதிய அரசியல் கட்சி!

இந்தியா, பிப்.26:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் செயல்படும் இயக்கங்களை ஒருங்கிணைத்து அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அப்துல் கலாம் பெயரில் நடத்தப்படும் பல்வேறு இயக்கங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கெடுத்து
கொண்டுள்ளனர்.

கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியில் அவரது உதவியாளர்கள் வி.பொன்ராஜ், ஆர்.சேதுராமன் ஆகியோர் 'அப்துல் கலாம் மிஷன் இந்தியா இயக்கம்', 'யுனைடெட் விஷன் 2020 இயக்கம்' ஆகிய இயக்கங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பொன்ராஜ் நடத்தும் அப்துல்கலாம் மிஷன் இந்தியா இயக்கத்தின் 2 நாள் கூட்டம் விருதுநகரில் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் இயக்கங்களை ஒருங்கிணைத்து அப்துல்கலாம் பெயரில் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்ராஜ் இது பற்றி கூறுகையில், அப்துல்கலாம் மறைவுக்கு பிறகு அவரது பெயரில் பல்வேறு சமூக நல திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறோம்.

அப்போது என்னை சந்திக்கும் மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் என்னை அரசியல் கட்சி தொடங்குமாறு வற்புறுத்துகிறார்கள்.

அவர்கள் நல்ல தலைவரை எதிர்பார்க்கிறார்கள். என்னையே புதிய அரசியல் கட்சிக்கு தலைமையேற்று வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும், இந்த கூட்டத்தின் முடிவில் தான் அப்துல்கலாம் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி உறுதியாகும் என கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments