வீட்டுக்குள் புகுந்து சிறுவனை தாக்கிய சிறுத்தை: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்
ஜார்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று தனியாக இருந்த சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் என்ற கிராமத்தில் தனது வீட்டில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான்.
அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுவனை தாக்கியதுடன், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச்சென்றது.
அந்த நேரத்தில் சிறுவனின் அலறல் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர் சிறுத்தையை துரத்திச்சென்று சிறுவனின் உடலை மீட்க முயன்றனர்.
ஆனால் அவர்களுக்கு பாதி உடல் மட்டுமே கிடைத்துள்ளது. இதனிடையே சிறுத்தை
சிறுவனை கொன்றதால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் பத்ரிநாத் தேசிய
நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கிராமத்துக்குள் புகுந்துள்ள சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
No comments
Thank you for your comments