ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33%; லோயர் பெர்த்தில் மூத்த குடிமக்களுக்கு 50% இடஒதுக்கீடு
ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு
வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கு லோயர்
பெர்த்தில் 50% ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே
பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
பாதுகாப்பு, சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
அதில், ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு
வழங்கப்படும். அதேபோல் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் 50% ஒதுக்கீடு வழங்கவும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு ரயிலிலும் 120 லோயர்
பெர்த்துகள் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும்.
மேலும் இ கேட்டரிங் சேவை 408 ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம்
செய்யப்படும். டெல்லி- சென்னை இடையேயான சரக்கு பாதை திட்டத்துக்கு
முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments