ரஷ்ய மருத்துவ பல்கலை தீவிபத்தில் 2 இந்திய மாணவிகள் பலி
டெல்லி, பிப்.16:
சுஷ்மா சுவராஜ் இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவு
செய்துள்ளார்.
அதில், "ரஷ்ய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் இறந்துள்ளனர். சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதில், "ரஷ்ய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் இறந்துள்ளனர். சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர். ரஷ்ய தலைநகர்
மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் விபத்து நிகழ்ந்த
மருத்துவ முகாம் உள்ளது. நமது மீட்புக் குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு
சென்றுவிட்டது." என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இந்திய மாணவிகள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை
சேர்ந்தவர்கள். ரஷ்ய விசாரணைக் குழுவின் முதல் கட்ட தகவலின் படி, மருத்து
பல்கலைக் கழக கட்டடத்தின் 4 ஆவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது.
No comments
Thank you for your comments