2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்சார வசதி- ஜெட்லி உறுதி!
அனைத்து கிராமங்களுக்கும் 2018ம் ஆண்டு மே 1-ந் தேதிக்குள்
100சதவீதம் மின்வசதி ஏற்படுத்தித் தரப்படும் என மத்திய நிதியமைச்சர்
அருண்ஜெட்லி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி
ரயில்வே பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று 2016-17-ம்
ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3-வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், கிராமப்புற வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, கல்வி என பல திட்டங்களுக்கு
நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அந்தவகையில், இந்தப் பட்ஜெட்டில், 2018 மே 1-ந் தேதிக்குள் அனைத்து
கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின்வசதி செய்து தரப்படும் என அருண் ஜெட்லி
உறுதியளித்துள்ளார்.
No comments
Thank you for your comments