Breaking News

எந்த நோக்கத்திற்காக சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்களோ அதை கண்ணியத்துடன் அனைவரும் காத்துக்கொள்ள வேண்டும்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

சுதந்திர காற்றை நம் இந்திய தேசத்தில் நிலவவிடவும் வருங்கால வம்சாவழியினர் வசந்தமாக வாழவும் தன்னுடைய குருதிகளையும், தேகங்களையும், வாழ்நாட்களையும், வலியுடன் கழித்தவர்களை நினைவு கூர்ந்து, எந்த நோக்கத்திற்காக நமக்காக சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்களோ அதை கண்ணியத்துடன் நாம் ஒவ்வொருவரும் காத்துக்கொள்ள வேண்டும். 67–வது குடியரசு தினத்தை கொண்டாடுகின்ற நாம் முழு சுதந்திரத்தை அடைந்து விட்டோமோ என்பதையும் எண்ண வேண்டும். இன்னும் வறுமையும், பசியும், வேலையில்லா திண்டாட்டமும், விவாசாயிகள் தற்கொலையும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இதெல்லாம் என்று முழுமையாக அகல்கின்றதோ அன்றுதான் நாம் உண்மையான முழு சுதந்திரத்தை அடைவோம். நாட்டுக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து, அத்துணை பேருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் வாழ்த்து கூறினார்.

No comments

Thank you for your comments